வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் தகவல்.!
indian metereological center infor deep air pressure weekness
தென்கிழக்கு வெங்கட் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் 16, 18 உள்ளிட்ட தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
indian metereological center infor deep air pressure weekness