விமான நிலையத்தில் தவித்த 131 பயணிகள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட வேண்டும். இந்த விமானத்தில் பயணிப்பதற்காக 53 பேர் முன்னதாகவே வந்து தயாராக இருந்தனர். ஆனால் இரவு ஏழு மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.

இதே போல், மாலை 6:10 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் செல்வதற்காக 78 பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால், அந்த விமானமும் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் இரண்டு விமானங்களில் செல்ல வேண்டிய, 131 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு இரவு 8:30  மணிக்கு, விமானம் 131 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த தாமதத்திற்கான காரணம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் இல்லாததால், இந்தக் காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று மாலை 5:55  மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இரவு 11:35 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்த இரண்டு விமானங்களும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo flights delay in chennai airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->