செவிலியர் அலட்சியத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை: கோவையில் பரபரப்பு... - Seithipunal
Seithipunal


 கோவைக் குழந்தைகள் மருத்துவமனையில் எனிமா மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டதால், பச்சிளம் குழந்தைப் பரிதாபமாக உயிரிழந்த சோகம், மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு.

கோவையில் உள்ள விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் புவனேஸ்வரி, தம்பதியினருக்குச் சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைப் பிறக்கும் பொழுது ஆசன வாயு முழுமை அடையாமல் பிறந்துள்ளது. குழந்தைப் பிறந்த தனியார் மருத்துவமனையிலேயே மலக்குடலை மட்டும் வெளியே எடுத்துத் தற்காலிகமாக அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.

அதற்குப்பின் மருத்துவர்கள் நான்கைந்து மாதங்கள் கழித்து மலக்குடல் ஆசனவாயு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அதன் பின் நான்கு மாதங்கள் கழிந்து குழந்தையின் பெற்றோர்கள் பந்தயச் சாலையில் உள்ள மசாணிக் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு முன்பே குழந்தை இறந்துள்ளது.

எமனாக மாறிய எமினா மருந்து

இதுகுறித்துக் குழந்தையின் பெற்றோர்கள் கூறியது, அறுவைச் சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்படும் எனிமா என்னும் மருந்தைச் செவிலியர்கள் அளவிற்கு அதிகமாகக் கொடுத்ததாகவும், இதனால் குழந்தைக்கு வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது எனப் பெற்றோர்கள் தெரிவிக்கும் பொழுது, செவிலியர் நிறுத்தாமல் அந்த எனிமா மருந்தைத் தொடர்ந்து கொடுத்துள்ளார்.

எனிமா மருந்து 100ml அளவு மட்டுமே கொடுக்கும் நிலையில், அந்தச் செவிலியர் 170 ml என அதிக அளவு கொடுத்துள்ளார். இதன் காரணமாகத்தான் குழந்தை உயிரிழந்துள்ளது எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குழந்தை உயிரிழந்ததற்கு முழு காரணமும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கு தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.

இதுகுறித்துப் பந்தய சாலைக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முடிவுகள் வந்தவுடன் குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினார்த் தெரிவிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Infant dies nurse negligence Controversy in Coimbatore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->