சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமா? பழைய வழக்குகளை தோண்டும் காவல்துறை.!!
Info tnpolice planing to Savukku Shankar arrest under goondas
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியதாக கோவை சைபர் களின் போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவர் மீது பெண் ஊடகவியலாளர் அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர் போலீசார் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல செய்தி ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் சந்தியா ரவிசங்கர் என்பவர் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் சந்தியா ரவிசங்கர் அவர்களை "கோலமாவு சந்தியா" என்ற பெயரில் விமர்சனம் செய்து கட்டுரை எழுதி அதோடு சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது தொடர்பாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த புகாரை தற்போது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தோண்டி எடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரின் பேரில் பிரபல அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு எண் 154/24 பிரிவு 294 பி, 354 டி, 506(1), 509 IPC மற்றும் 4 TNPHW ஆகிய பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்படுவதால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Info tnpolice planing to Savukku Shankar arrest under goondas