ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள்.! - Seithipunal
Seithipunal


ஆசியாவில் உள்ள ரெயில்களில் வித்தியாசமான ரயில் என்றால் அது ஊட்டி மலை ரெயில் தான். ஏனென்றால், இந்த மலை ரயில் பல் சக்கர தண்டவாளம் கொண்டது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

இந்நிலையில், நேற்று இந்த மலை ரயிலை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ரூ.3.60 லட்சம் செலுத்தி வாடகைக்கு எடுத்தனர். இதையடுத்து இந்த மலை ரயில் காலை 10 மணிக்கு கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட்டு சென்றது .

இந்த மலை ரயிலில் 16 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் குகை, பாலம், வனவிலங்குகள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு உற்சாகமாக குன்னுருக்கு பயணம் செய்தனர். 

இதை தொடர்ந்து குன்னூரில், பாரம்பரியமிக்க மலை ரயிலின் லோகோ பணிமனையை பார்வையிட்டு நூற்றாண்டுகளை கடந்த பழமை மிக்க நீராவி இன்ஜின் இயக்கம் குறித்து கேட்டறிந்த பிறகு குன்னூர் ரெயில் நிலையத்தை பார்வையிட்டனர். 

இது பயணம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ்டஹர் என்பவர்  கூறியதாவது, "கடந்த வாரம் நாங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வந்தோம். முதலில் டார்ஜிலிங், சிம்லா சுற்றுலா முடித்துவிட்டு, பிறகு இந்த மலை ரயிலில் குன்னூருக்கு வந்தோம். இந்த மலை ரயிலில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland passengers hired the ooty hill train


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->