'சூப்பர்'... வந்துவிட்டது சென்னை முழுக்க 'ஒரே பயணச்சீட்டு'! சென்னை மெட்ரோ ரயில், பேருந்துகளுக்கு ஒரே 'டிக்கெட்' அறிமுகம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மாநகர பேருந்துகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் திட்டம்  இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களில் மக்களின் போக்குவரத்தில் புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பயண நேரத்தை சேமிப்பதோடு எளிதாக சென்று வரவும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது.

மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்காரச் சென்னை அட்டை என்ற புதிய  பயணச்சீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இந்த சிங்கார சென்னை அட்டையை  சென்னை மெட்ரோ ரயில்களிலும் மும்பை, பெங்களூர், கொல்கத்தா, கான்பூர், டெல்லி போன்ற இடங்களில் உள்ள மெட்ரோ ரயில்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இனிவரும் காலங்களில் புறநகர் ரயில்கள் மாநகர பேருந்துகள் சுங்கச்சாவடி என இதன் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த அட்டைகள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் ரூபே  அப்ளிகேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டைகள் தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றன அவற்றை நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கென பாரத் ஸ்டேட் வங்கி தனி இணையதளத்தையும் உருவாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Introduction of Single Travel Ticket for all Chennai Metro Suburban Trains and Corporation Buses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->