பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு - தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹெக்டர் சாலமன். இவர் தனது உறவினர்களான கார்த்திக் குமார், துனுதீன் மற்றும் பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்க் எலான்சா ஓட்டல் பாரில் மது அருந்தியுள்ளார்.

அப்போது, அவர்களுடன் வந்த இரண்டு பெண்கள் பாரில் நடனமாடிய போது, அவர்கள் மீது அங்கிருந்த சிலர் இடித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.

இதையடுத்து ஹெக்டர் சாலமன் பாரில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட குகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். 

இதில், காயமடைந்த சாலமனை அவருடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அதன் பின்னர், போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து இந்த மோதல் தொடர்பாக குகன் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

investigation of knief attack to youth case in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->