தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
IPS Transfer Amudha TNGovt
கடந்த 5 ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர்கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன.
மேலும் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாளவன் கூட, உண்மையான குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் விமர்சித்து இருந்தார்.
இது அனைத்திற்கும் மேலாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், சென்னையின் காவல் ஆணையர் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் முதல் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வரை கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
* மதுவிலக்கு அமலாக்கத்துறை ஏடிஜிபியாக அமல்ராஜ்,
* மாநில குற்ற ஆவண பிரிவு ஏடிஜிபியாக ஜெயராமன்,
* ஆயுதப்படை ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால்,
* சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக வெங்கட்ராமன்,
* தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக்,
* வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க்,
* சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் தெற்கு - கண்ணன் ஐபிஎஸ்,
* சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவின் குமார் அபிநபு,
* திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.லட்சுமி,
* தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா,
* தலைமைச் செயலக கூடுதல் டிஜிபியாக வினித் தேவ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
IPS Transfer Amudha TNGovt