நாள்தோறும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச்சொல் | உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று, அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின்ஆணையில், பொருளுடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்துதல் தொடர்பாக பின்வருமாறு ஆணையிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள். கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஒர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

தமிழ் கலைச் சொல்லையும். திருக்குறளையும் மேற்குறிப்பிட்டவாறு காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பினும், ஒரு சில அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான அலுவலகங்களில் தகவல் பலகைகளில் குறட்பாவையும் தமிழ் கலைச் சொற்களையும் காட்சிப்படுத்தும் நிகழ்வு காணப்படவில்லை.

எனவே. மேற்படி அரசாணையில் அறிவுறுத்தியதிற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும், தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஒர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ்ச் சொல்லுடனும் 4x3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகை வெள்ளை பலகையிலும் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள்/ செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டுக் கொள்ளலாம். 

மேலும், மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக அரசு செய்ய தவறியதை சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் "தமிழைத் தேடி" இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு செய்து வந்த நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iraianbu order for thirukural and Tamil Word


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->