மக்களே உஷார்! மருந்தடிக்கும் எந்திரம் வெடித்து உடல் சிதறி ஒருவர் பலி!
ironmonger was killed when a pesticide spray machine exploded near Karur
கரூர் அருகே மருந்தடிக்கும் ஸ்பிரே எந்திரம் வெடித்தத்தில் இரும்பு வியாபாரி உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தரங்கம்பட்டி அருகே கடவூர் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி வாங்கிக் கொண்டு வந்த பழைய பொருட்களை வீட்டில் அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வழக்கம்போல் இரும்பு பொருட்களை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்து ஸ்பேரே எந்திரத்தில் உள்ள பித்தளை கம்பியை உடைத்து எடுக்க முயற்சி செய்துள்ளார். உடைக்க முடியாததால் வீட்டுக்குள் சென்று சம்பட்டி எடுத்து வந்தாக கூறப்படுகிறது.
பித்தளை கம்பியை உடைத்து எடுப்பதற்காக சம்பட்டியால் விவசாய பயிருக்கு மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே எந்திரம் உடைத்தபோது திடீரென வெடித்ததில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருந்தடிக்கும் இயந்திரம் வெடித்ததற்கான காரணம் மர்மமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தம் காரணமா அல்லது வெடி பொருட்கள் இருந்ததா என்று போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தின் ஸ்பேரே மோட்டாரில் ஆயில் பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகளை வரவழைத்து போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
கரூரில் ஸ்பிரே எந்திரம் வெடித்து சிதறியதில் இரும்பு வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
ironmonger was killed when a pesticide spray machine exploded near Karur