மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் இன மக்கள் - இது தான் காரணமா?
irular tribul peoples gatherd in mamallapuram beach for masi pournami function
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மாசிமாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான மாசிமக பவுர்ணமி இன்று காலையில் தொடங்கியது.
இந்தத் திருவிழாவிற்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், இருளர் பழங்குடி இன மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
இன்று அவர்களுடைய குலதெய்வமான கன்னியம்மன் கடலில் எழுந்து அருள் பாலிப்பதாக நம்புகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக குடில்கள் அமைத்து தங்கி வரும் மக்கள், இன்று அதிகாலை முதல் கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், கடற்கரை மணலால் சிறிய அளவில் கோயிலை உருவாக்கி மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர். மேலும், அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளான குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
irular tribul peoples gatherd in mamallapuram beach for masi pournami function