தமிழ்நாடு 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர்: நிதி ஆய்வறிக்கை வெளியீடு!
TN Budget 2025 2026
தமிழக சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று (நாளை) தொடங்கவுள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25" -ஐ வெளியிட்டு உள்ளார். மத்திய அரசு தனது பட்ஜெட் தாக்கலுக்கு முன் நடப்பு நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதேபோல், தமிழக அரசு இந்த முறையும் அதே நடைமுறையை பின்பற்றியுள்ளது.
முக்கிய விவரங்கள்:
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை – முதல்முறையாக மாநில அரசு வெளியீடு.
வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கை தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, முக்கிய நிதிநிலை முன்னேற்றங்கள், திட்டங்களின் அமலாக்கம் போன்ற முக்கிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும்.