கரகாட்ட கோஷ்டிக்குள்ளே நடக்கும் உட்பூசல்! இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா.? - Seithipunal
Seithipunal


பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் அனைத்து மக்களுக்கும் பரிட்சயமானது கரகாட்டம். கோவில் திருவிழாக்களின் போதும் சாமி ஊர்வலத்தின் போதும் தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு அதை கீழே விழாமல் லாவகமாக ஆண்களும் பெண்களும் ஆடுவது  பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

இப்படி கலை பாரம்பரியமிக்க கரகாட்டத்தாலும் தன்னுடைய நடன திறமையாலும் பல ரசிகர்களை தனக்கென சேர்த்தவர் தான்  மதுரை திருமங்கலம் பகுதியைச் சார்ந்த  பரமேஸ்வரி. மூன்றாண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது தாயாருடன் வசித்து வரும் இவர்  பட்டாம்பூச்சி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அதில் தன்னுடைய கரகாட்டம் சம்பந்தமான வீடியோக்களையும்  தன்னுடைய நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவை தவிர இவரது ரசிகர்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்  ஆகிய சமூக வலைதளங்களில் இவருக்கு என தனி ரசிகர் பக்கங்களை அமைத்து  இவரது நடனங்களை  பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பரமேஸ்வரி கரகாட்ட கலையை கெடுத்து வருவதாகவும் அதனை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி அடையாளத்தோடு வளம் வருவதாகவும் அவருக்கு எதிராக  குற்றச்சாட்டுகள் ஒருபுறம்  உருவாகி வருகிறது. அகில இந்தியக் கலை குடும்பம்  என்னும் அமைப்பைச் சார்ந்த கரகாட்டக் கலைஞர்கள் இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். மூன்று ஆண்டுகள் கொரோனாவிற்கு பின் தற்போது தான் நாட்டுப்புற கலைகள் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. இது போன்ற நேரங்களில்  கலைஞர்களுக்குள்ளேயே இவ்வாறு மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is all this necessary at this time of conflict going on within the Folk art groups


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->