திமுக ஆட்சியில் தலை தூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்! ஆட்சிக் கலைப்பை ஏற்படுத்தி விடாதீர்கள் என ஸ்டாலினுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


சட்டப்பிரிவு 356 ஐ மீண்டும் மீண்டும் குறிப்பிடும் பாஜக தலைவர்கள்!

இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசரை கண்டித்தும் மற்றும் கைதான பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி ராமசாமியை ஆதரித்தும் பாஜகவினர் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் திமுகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் ஆட்சி கலைப்பு குறித்து சூசகமாக பேசியுள்ளார். 

 பேச்சை தொடங்கிய எஸ்ஆர் சேகர் " ஆண்டிமுத்து ராசா திமுகவை போட்டு உடைத்து விட்டார். திமுகவில் இருக்கும் ஆர்எஸ் பாரதி மற்றும் இதர பேச்சாளர்கள் வீர வசனம் பேசுவார்கள். ஆளுநரை பற்றி பார்க்காத போது வெளியில் பேசுகிறார்கள். ஆனால் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும்பொழுது திமுகவினர் முட்டி போட்டுக்கொண்டு செல்கின்றனர். ஆளுநருடன் உட்கார்ந்து பேசும்பொழுது நாற்காலியின் ஓரங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு பயந்த சுபாவமாக பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக ஒரு வாய்ச்சொல் வீரன்" என கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய அவர் " 1996 இல் கோவை மாநகரில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியது. அதனை ஜெயலலிதாவால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் திமுக வெற்றி பெற்றது என்று தெரிந்தவுடன் கோவையில் அமைக்கப்பட்ட அனைத்து சோதனை சாவடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அதேபோன்று தற்பொழுது தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்குகிறது. 

பழைய நினைப்பை வைத்துக்கொண்டு குடத்தைப் போட்டு உடைத்து விட வேண்டாம் ஸ்டாலின். 2026ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பதற்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்ததா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை. இரண்டு முறை நாங்கள் சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்தி விட்டோம். இந்த முறையும் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்த வைத்து விடாதீர்கள். உங்களின் ஆட்சியை முழுமையாக முடித்துக் கொண்டு போங்கள். உங்களின் வீர வசனத்தை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள்" என திமுகவிற்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் ஆர்ப்பாட்ட மேடையில் இருக்கும் பாஜக தலைவர்களை வரவேற்றுப் பேசிய பொருளாளர் எஸ்.ஆர் சேகர் "2024 அல்லது 2025 இல் தமிழக அமைச்சர் அவையை அலங்கரிக்க போகும் நிர்வாகிகளே" என அவர்களை வரவேற்றார். இதனால் தமிழகத்தில் ஆட்சி கலைப்பு என்பது பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடும்.

நேற்று மதுரையில் நடந்த பிறந்த நாள் விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இதே சட்டப்பிரிவு குறிப்பிட்டு ஆட்சி கலைப்பை பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Islamic terrorism in the DMK regime BJP will publicly warn Stalin not to cause the dissolution of the regime


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->