இஸ்ரேல் அரசே இனப்படுகொலையை உடனே நிறுத்து!!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை உடனே நிறுத்த வலிவுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளிட்டுள்ளார்.

இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அதற்கு பாலஸ்தீனம் பதில் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடத்து வருகிறது. இதுவரை  36,000 பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளுமான அப்பாவி பொது மக்கள். இனவெறி இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகள், உணவுக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது.

26.05.2024 அன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் குழந்தைகளும், பெண்களுமாவர். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்து என்று சொன்ன பிறகும் இஸ்ரேல் அரசு போரை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதரித்து ஆயுதங்களும், நிதி உதவிகளும் செய்து வருகின்றன. இந்தியாவிலிருந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

மனிதகுலம் வெட்கித் தலைகுனியும்படியான ஒரு கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், 1. ரஃபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும், 2. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், 3. சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 4. மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இடதுசாரி ஜனநாயக சக்திகளும், அமைதியையும், நியாயத்தையும் விரும்பும் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவளித்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel immediately stop attack June 2 cpim demonstration


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->