நிலவில் துளையிட்டது இந்தியா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!
ISRO new update of Chandrayaan 3 mission
நிலவின் மேல்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலை குறித்து சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர் முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது குறித்த இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை சேஸ்ட் செய்கிறது.
இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.
நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன.
நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
English Summary
ISRO new update of Chandrayaan 3 mission