மொத்தம் 670 வினாடிகள்.!! ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி.!! இஸ்ரோ அறிவிப்பு.!!
ISRO scientists announce success of Gaganyaan engine test
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியும், மனிதர்கள் தொடர்ந்து விண்வெளியில் இருக்கும் வகையில் புதிய விண்வெளி நிலையம் உருவாக்குவதாகும்.
குறுகிய திட்டங்களாக ஆளில்லா விண்கலத்தை 2020 டிசம்பர் மாதத்திலும், 2021-ம் ஆண்டின் ஜூன் மாதத்திலும், அதனைத் தொடர்ந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும், விண்வெளியில் மனிதர்கள் நிலையாக இருக்கும் வகையில், விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டதால் ஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2021ம் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது.
240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்து வளாகத்தில் நடத்தப்பட்ட ககன்யான் என்ஜின் பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தின் சோதனையில் மொத்தமாக 670 வினாடிகள் மேற்கொள்ளப்பட்ட இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
ISRO scientists announce success of Gaganyaan engine test