கடலூரில் சோகம் - குளிக்கச் சென்ற ஐடிஐ மாணவர் நீரில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம் பகுதியில் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்கள் நேற்று நத்தப்பட்டில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்காகச் சென்றனர். அவர்களில் கதிர் என்ற மாணவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார். 

இதையறிந்த சக மாணவர்கள் கத்திக் கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்று முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் மாணவர் கிடைக்கவில்லை. இதனால், மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் ஐ.டி.ஐ. மாணவர் கதிர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதைப்பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவரின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iti student drowned water in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->