தேர்தல் நேரத்தில் போராட்டம்.. ஜாக்டோ-ஜியோ அதிரடி.. திமுக அரசு நெருக்கடி..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களான ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பினர் நேற்று நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி காவல் துறையினர் கைது செய்து பேருந்துகள் மூலம் அருகில் உள்ள சமுதாயக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளனர். இது குறித்தான ஆலோசனை நடத்தி இன்னும் ஓரிரு நாட்களில் தங்களின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிக்க உள்ளனர்.

நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto geo ready to next level protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->