கார்ப்ரேட் சிந்தனை திமுக அமைச்சர் பிடிஆர் எங்களை நிராகரிக்கிறார் - ஜாக்டோ ஜியோ  அமைப்பு குமுறல்! - Seithipunal
Seithipunal


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பு உண்ணாவிரத போராட்டம், மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, வருகின்ற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ஆயத்த மாநாடு நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், அதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் ஐந்தாம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் கூட்டாக சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு நிதித்துறை கார்ப்பரேட் சிந்தனை உடன் செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டினர்.

மேலும் எங்கள் கோரிக்கையை நிதியமைச்சர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் என்றும், கார்ப்பரேட் முதலாளித்துவ சிந்தனை இருப்பதால், எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jacto jio press meet 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->