மாணவர்களுக்கு மட்டும் குறி .. ஜாபர் சாதிக் வழக்கில் திடுக்கிடும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதன் அடிப்படையில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், அவருடைய நண்பரும் திரைப்பட இயக்குனருமான அமீர், புகாரி ஓட்டல் அதிபர் இர்ஃபான் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 40 கோடி ரூபாய் வரை சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 

அதேபோன்று ஜாபர் சாதிக்கின் வீட்டில் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. குறிப்பாக பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக் இலட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் தங்கி படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதற்கு இடைத்தரகர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்க நிர்வாகிகளை பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaffar Sadiq drug supply to college students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->