ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்த செயல்.! குவிந்துவரும் மக்களின் ஆதரவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிலே அதிகப்படியான வாடிவாசல் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் அதிகப்படியான காளைகளை அவிழ்த்து கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விராலிமலை ஜல்லிக்கட்டு, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விராலிமலையில் நடந்த கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டில் கார்களும், பைக்குகளும் பரிசுகளாக வழங்கப்பெற்றது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின்,  ஜல்லிக்கட்டு பெருமையை நினைவூட்டும் வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் c.விஜயபாஸ்கர், அவர்களது அமைப்பில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவு சின்னத்தில் வீரமிகு காளையை, வீரர் தழுவுகின்ற விதத்தில் சிலை செதுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. அணைத்து மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு நுழையும் வழியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு சின்னம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu statue in pudukkottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->