தமிழகத்திற்கே தேவை இல்லை... இதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு - ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்த போராட்டங்களுக்கு நீட் விலக்கு தான் உடனடி தீர்வு. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தை வரவேற்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், 

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விரைவில் இதை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அரசியலில் முதல் முறையாக கல்வி விவகாரம் தொடர்பாக விஜய் தெரிவித்துள்ள கருத்து பேசு பொருளாக மாறி உள்ளது. 

இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பது தான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு. விஜய்யின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar says NEET not required TN


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->