மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்!
Jayalalithaa dedicated her life to the people: PM Modi
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் கவர்னர் தமிழிசை,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர் என கூறியுள்ளார் . மேலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கவுரவமாகும் என்றும் அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர் எனபிரதமர் மோடிஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Jayalalithaa dedicated her life to the people: PM Modi