கோவை மாவட்டத்தில் அரசு துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
job vacancy in coimbatore health association
கோவை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு /12ஆம் வகுப்பு / B.Sc / Diploma / DMLT / ITI / M.Sc / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது 59ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
மாத ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.12.2024
English Summary
job vacancy in coimbatore health association