ரயில் பயணத்தின் போது லீலையில் ஈடுபட்ட சிஆர்பிஎஃப் வீரர்.. பெங்களூரூ பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!
Jolarpet Railway police Arrest CRPF Police Who did Sexual harassment for Bengalur women
சக பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சிஆர்பிஎஃப் வீரர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வாசவி என்ற 38 வயது பெண்மணி பயணித்துள்ளார். காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டைக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்த திருப்பத்தூர் வாணியம்பாடியைச் சேர்ந்த சி ஆர் பி எப் வீரர் சுரேஷ் என்பவர் தான் இந்த மோசமான காரியத்தை செய்தது. டிக்கெட் பரிசோதகர் வந்தபோது வாசவி அவரிடம் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் சுரேஷை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இது பற்றி வழக்கு ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவர் மது போதையில் இருந்ததாகவும் அதனால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் விசாரணைக்கு பின் தெரிவித்தனர்.
English Summary
Jolarpet Railway police Arrest CRPF Police Who did Sexual harassment for Bengalur women