இப்பதான் முதல்வர் ஆய்வு பண்ணாரு..அதுக்குள்ள அம்மா உணவகத்தில் ஏழரையை கூட்டிய எலிகள்!   - Seithipunal
Seithipunal


அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்,  2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில்  தொடங்கப்பெற்றது.

இந்த திட்டத்தால் கூலி தொழிலாளிகள், ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து படிக்கும் மாணவர்கள், குறைந்த சம்பளம்  பெறும் தொழிலாளர்கள் என பல்வேறு  தரப்பினரும் பயன் பெற்றனர் . இதனால் இந்த திட்டத்திற்கு மக்களிடையே  வரவேற்பு நாளுக்குள் நாள் பெருகியது. முதலில் 15  இடங்களில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம், நாளடைவில் விரிவுபடுத்தபட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த அம்மா உணவகம் மூடப்படும் என்று அஞ்சிய நிலையில், தொடர்ந்து உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்றவாரம், முதல்வர் ஸ்டாலின் திடீரென்று மேற்கொண்டு,  21 கோடி ரூபாய் நிதியை அம்மா உணவக திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.

என்னதான் அரசாங்கம் மக்கள் நலனுக்காக நிதி  ஒதிக்கினாலும், அதிகாரிகள், மற்றும் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துவருகிறது. அந்தவகையில்,  ராமநாதபுரம்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முறையாக பராமரிக்கப்படாத அம்மா உணவகம்
6 மாதமாக பழுதானா நிலையில் கிரைண்டர் உள்ளதாகவும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதாகவும்  புகார் எழுந்துள்ளது. அதோடு, எலிகள்
சமையலறையில் ஓடி விளையாடும் காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Just now, the Chief Minister investigated. the rats in Amma unavagam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->