"கலைஞர் 100" விழா திடீர் இடமாற்றம்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா தமிழக அரசால் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழ்நாடு திரைத்துறையினர் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் 100 விழா எடுக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தேதியும் குறிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்புகள் காரணமாக டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 விழாவை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கலைஞர் 100 விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சி போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்த வேண்டியுள்ளதால் நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalanjar 100 festival suddenly shifted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->