கள்ளச்சாராய விவகாரம் | பாஜக முன்னாள் நிர்வாகி கைது! தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவரும் கைது! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே விஷ சாராயம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் பாஜக நிர்வாகி மற்றும் மெத்தனால் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷ சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் திமுக நிர்வாகியும், திமுக கவுன்சிலரின் கணவருமான ராஜா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே விஷ சாராயம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் சற்று முன்பு போலீஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த விஜயகுமார் கடந்த 14ஆம் தேதி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, செங்கல்பட்டு அருகே விஷச்சாராயம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய நபர் ஏழுமலையை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரை தற்போது தமிழக போலீசார் கைது செய்துள்ளது.

சாராயத்தில் கலக்க மெத்தனால் கொடுத்ததாக ஏழுமலை அவரது கெமிக்கல் ஆலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷ சாராயம் அருந்திய 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் ஏழுமலைக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட கெமிக்கல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalla sarayam case DMK and BJP Members arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->