கள்ளக்குறிச்சி: சாலையில் திடீரென தீப்பற்றிய கார்.. உயிர் தப்பிய 4 பேர்..!
kallakurichi Car suddenly catches fire on the road 4 people survive
கள்ளக்குறிச்சி சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர்தப்பினர்.
பாண்டிச்சேரியை சேர்ந்த நெல்சன், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் என நான்கு பேர் பாண்டிச்சேரியில் இருந்து ஏற்காடு நோக்கி காரில் பயணித்துள்ளனர் .
அப்போது நெல்சன் ஓட்டிச் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் மேம்பாலம் அருகே வந்தபோது கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனையறிந்த நெல்சன் காரை நிறுத்திவிட்டு, நான்கு பேரும் உடனடியாக இறங்கி உள்ளனர். இது குறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவமானது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
kallakurichi Car suddenly catches fire on the road 4 people survive