கள்ளக்குறிச்சி விவகாரம் : தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை .. 59 ஐ நெருங்கி உள்ளது..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. அதன் படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி என்பவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி இரவு கள்ளச் சாராயம் அருந்தியதில் மொத்தம் 220 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். 

தொடர்ந்து ஜூன் 19ம் தேதி அவர்களில் பலர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், சேலம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப் பட்டனர். இதில் தற்போது வரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 167 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு கண் பார்வை முழுவதுமாக பறி போயுள்ளது. மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக் கூடும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த கள்ளச் சாராய சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி காவல்துறை இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy Death Toll Reached 59


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->