கள்ளக்குறிச்சி சம்பவம்: விசாரணைக்குழு அமைத்த மகளிர் ஆணையம்..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தி 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 156 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம்,கடலூர்  அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் இந்த 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் இது வரை 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

இந்நிலையில், இந்த கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்தில் 6 பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், அதன் உறுப்பினரான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து தாமாக முன் வந்து இந்த 6 பெண்களின் மரணம் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy NCW Inquiry Comittee


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->