கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளி சூறையாடப்பட்டதில் இவ்வளவு கோடி ரூபாய் நஷ்டமா? அதிகாரபூர்வமாக வெளியான அறிக்கை.!
Kallakurichi kaniyamur school damage report
கள்ளக்குறிச்சி, கணியமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.
இதுசம்மந்தமாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், தனியார் பள்ளி விவகாரத்தில் சேதம் அடைந்த சொத்து மதிப்பின் தொகை மூன்று கோடியே, 45 லட்சத்து, 83 ஆயிரத்து 72 ரூபாய் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சொத்து மற்றும் போலீசாரின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்ததின் மதிப்பு 90 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என்றும், பள்ளியின் கம்ப்யூட்டர், யூபிஎஸ், கதவு, ஜன்னல், சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக சுமார் இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் பொருள் சேதமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தமிழக மின்சார துறைக்கு 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரம் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தமாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் சேதம் அடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக மூன்று கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக சிறப்பு குழு விசாரணை குழு விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kallakurichi kaniyamur school damage report