#கள்ளக்குறிச்சி : நர்ஸிடம் பாலியல் சீண்டல்.. ஆட்டோ ஓட்டுனரை கதறவிட்ட இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 21 வயது கொண்ட ஒரு இளம் பெண் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்த இளம்பெண் சில நாட்களுக்கு முன் ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுனரான விஜயகுமார் என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக சில சீண்டல்களை செய்துள்ளார். விஜயகுமாரிடம் இருந்து தப்பித்து வந்த இளம்பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகினால் அதை வெளியில் தெரியப்படுத்தாமல் பல பெண்களும் பயந்து நடுங்கி தங்கள் வாழ்க்கையே பயந்து பயந்து வாழும் சூழல் இருக்கின்ற நிலையில், துணிச்சலுடன் இளம்பெண் கையாண்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi nurse abused by auto driver


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->