#சற்றுமுன்: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் பள்ளியுடன் பேச்சுவார்த்தை.. புதிய ஆதாரம் வெளியீடு.!
Kallakurichi Srimathi parent Selvi met with School management on July 13
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கடந்த 13 ஆம் தேதி பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் புகைப்படமாக வெளியாகி இருக்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் புகார் கொடுத்திருந்தார். இதன் விசாரணை முடிவில் மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழலில், மாணவி ஸ்ரீமதியின் தாயார் பள்ளி நிர்வாகத்துடன் கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அமர்ந்து பேசுகின்ற காட்சி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஸ்ரீமதியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பணம் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டி வந்த நிலையில், புதிய ஆதாரம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kallakurichi Srimathi parent Selvi met with School management on July 13