கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமான் செந்தில் முருகன் கைது! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்து உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, கலவரமாக மாறியது. மேலும், பள்ளியின் வாகனங்கள், வகுப்பறைகள், பள்ளியில்  இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன.

இது குறித்த வழக்கில் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நூறுக்கம் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான கலவர வழக்கில், ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகன் இன்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை சம்மந்த அனுப்பியும், செந்தில் முருகன் ஆஜராகாததால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே கலவர வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செந்தில் முருகன் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Srimathi Ungle Arrest TNPolice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->