கள்ளக்குறிச்சி மர்ம மரண வழக்கு விசாரணை.. புதிய குழு தமிழகத்திற்கு அதிரடி வருகை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது.  இதுகுறித்து CBCID போலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் விசாரணை செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து அதிகாரிகள் இன்று மாலை வருகின்றனர். 

இன்று மாலை சென்னை வருகை தரும் அதிகாரிகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களுடன் இந்த விசாரணையின்போது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்களும் பள்ளிக்கு செல்ல இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Student death issue International Child Rights Commission comes To tn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->