#வடதமிழ்நாடு || தேர் கவிழ்ந்து விபத்து., பெரும் அதிர்ச்சியில் பக்தர்கள்.!
kallakurichi ther accident
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை பகுதியில் கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாசி மாசம் முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவனாசூர்கோட்டை அங்காளம்மன் கோவில் கடந்த 2-ஆம் தேதி கோவில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மாசி மாதத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவரான அங்காளம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வந்தனர்.
அப்போது, மேலப்பாளையம் அருகே தேர் வந்துகொண்டிருந்தபோது, லேசான மழை பெய்ததால் சாலையில் சேரில் சிக்கி தேர் ஒருபக்கமாக சாய்ந்தது.
தேர் விழுவதைக் கண்ட பக்தர்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்துடன் கூச்சலிட்டு சத்தமிட்டனர். இந்த விபத்தில் பக்தர்கள் யாரும் காயமடையவில்லை. அதே சமயத்தில் தேரில் அமர்ந்திருந்த பூசாரிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் ஜேசிபி உதவியுடன் தேரை நேராக நிமிர்த்தி, உடனடியாக வீதிஉலா விரைவாக முடித்துக்கொண்டு, கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
English Summary
kallakurichi ther accident