வாக்களித்த மக்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கமுடியாதா? அரசின் அரசமைப்பு கடமை தான் என்ன? வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் தற்போதைய நிலை என்ன? பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசின் சலுகைகள் அவர்களுக்கு சென்றடைந்து உள்ளதா? என்பது குறித்து வருகின்ற 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோய் உள்ளது. இன்னும் சிலருக்கு உடலில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த வழக்கு இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில், கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக மக்களின் வாக்குகளை பெற்ற பின், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? இல்லையா? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசமைப்பு கடமை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் இத்தனை ஆண்டுகளாக கல்வராயன் மலைப்பகுதிக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், ஆர்டிஓ, வருவாய்த்துறை அதிகாரிகள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மக்களின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கான அரசின் செயல் திட்டங்கள் சென்றடைகிறதா? என்பது குறித்து வருகின்ற 24-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalvarayan Hills People case Chennai HC TNGovt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->