கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கமல்ஹாசன்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100 கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழக முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி சோதனை நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் போலீசார் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரை துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கமல்ஹாசன் மருத்துவர்கள் இடம் கேட்டு அறிந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan personally meet victims poisonous liquor


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->