எண்ணெய் கழிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்!  - Seithipunal
Seithipunal


எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் மிக்ஜம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி பின்னர் கடலில் கலந்தது. 

இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் கடந்த 10 ஆம் தேதியிலிருந்து தீவிரமாக நடைபெறுகிறது. சுமார் 75 படகுகளில் சென்றுள்ளார் மீனவர்கள் நவீன எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றி வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். 

பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவுகள் பாதிப்புகளை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், 'இங்கு பலமுறை நான் வந்துள்ளேன். 

கடந்த காலங்களை விட பாதிப்பு அதிகமாகத்தான் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்று கழிவுகள் முழுவதுமாக அகற்றப்படும் என்ற அறிகுறி இங்கு இல்லை. 

நவீன தொழில்நுட்பம் போன்றவை எண்ணெய் கழிவுகள் அகற்றுவதில் பயன்படுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தால் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan visited sea areas affected oils pills


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->