காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காணாமல் போன குழந்தைகளை மீட்ட போலீசார்!
Kanchipuram government hospital police rescue missing children
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காணாமல் போன இரண்டு குழந்தைகளை கண்டுபிடிக்க இரு தனிபடைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருவதாக இன்று எஸ்.பி எம். சுதாகர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவரது தம்பி மூர்த்தி. மூர்த்தியின் மனைவி காமாட்சிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை பார்க்க ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சௌந்தர்யா (வயது 7 ) மகன் சக்திவேல் (வயது 3) ஆகிய மூன்று பேரும் கடந்த 8ஆம் தேதி மருத்துவமனை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வளாகத்தில் தங்கி இருந்தனர்.
அப்போது சௌந்தர்யாவும் சக்திவேலும் காணாமல் போய்விட்டதாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து எஸ்.பி.எம் சுதாகர் தெரிவிக்கையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
அந்த காட்சிகளில் 50 வயது பெண் ஒருவர். அந்த 2 குழந்தைகளையும் அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை முன்னிலையாக வைத்து காணாமல் போன குழந்தைகளை தேடி வந்தோம். காஞ்சிபுரம் டி.எஸ்.பி தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குழந்தைகள் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தை வைத்து காணாமல் போன குழந்தைகளை இன்று காலை 11.30 மணிக்கு பத்திரமாக மீட்டனர்.
English Summary
Kanchipuram government hospital police rescue missing children