சாமி சிலைகளை கல் என உணர வைத்தது திராவிட இயக்கங்கள் தான் - பொருநை இலக்கிய விழாவில் கனிமொழி பேச்சு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் இலக்கியத் திருவிழா நேற்று நேற்று முதல் ஐந்து இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 169 எழுத்தாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரதான அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நெல்லை நீர் வளத்தை எப்படி சிறப்பாக கையாள்வது என்பது குறித்து ஆட்சியரின் கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் எழுதிய 1800 கடிதங்கள் அடங்கிய இலக்கியத் தொகுப்பை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய கனிமொழி "மனிதன் தான் வழிபட்ட சாமி சேவையை கல் என்றும், தான் மனிதன் என்றும் உணர வைத்தது திராவிட இயக்க எழுத்துக்கள். நிகழ்காலத்தை தாண்டி முன்பே பெண் விடுதலை குறித்து தைரியமாக பேசிய இயக்கம் திராவிட இயக்கம். 

பெண் விடுதலையை திரைப்படத்திலும் தைரியமாக சொன்னது திராவிட இயக்கம்தான். சீதை 23 ஆண்டுகள் இராமனோடு வாழ்ந்த காலத்திற்குப் பிறகு ராவணன் சீதையை தூக்கிச் சென்றான். சீதையை மீட்ட பிறகு சீதை மீது நம்பிக்கை இன்றி ராமன் சீதையை தீயில் இறங்க சொன்னது ஏன்? என்ற கேள்வி என்னில் எழுகிறது. ராவணன் தூக்கி சென்ற பிறகு ராமன் சீதையின் காதலால் உருகியது சரி. ஆனால் மனைவி மீது நம்பிக்கை இல்லையே ஏன்? என கேள்வி எழுப்பினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi said Dravidia movements made god idols feel like stone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->