குமரி: கல்லால் அடித்து, எரித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்! அதிரவைக்கும் கொடூர கொலை!
Kanniyakumari young man hacked to Death
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் இன்று நடந்த கொடூரக் கொலை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயல்தெரு பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டார்.
பின்னர், அவரை கல்லால் அடித்து தாக்கியதுடன், தீ வைத்து எரித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த தகவல் கிடைத்ததும், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.
பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையின் காரணம் என்ன? யார் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.
English Summary
Kanniyakumari young man hacked to Death