குமரியில் பரபரப்பு: அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை! காரணம் குறித்து துப்புதுலக்கும் போலீசார்!
Kanyakumari ADMK leader commit suicide
கன்னியாகுமரி, கொட்டாரம் அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் ராய் (வயது 52) இவர் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க மேலமைப்பு பிரதிநிதியாக இருந்தார்.
மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு மேரி ராஜ் என்ற ஒரு மகன் உள்ளார்.
இவர் நேற்று இரவு அவரது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அலறியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து ஜான்சனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு வரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து செல்வராணி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று ஜான்சன் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க மேலமைப்பு பிரதிநிதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Kanyakumari ADMK leader commit suicide