செம்மண் கடத்துவதாக ரகசிய தகவல்: பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!
Kanyakumari semman smuggled case against BJP celebrities
கன்னியாகுமரி, நாகர்கோவில் பா.ஜ.க பிரமுகர் உட்பட 4 பேர் களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை பகுதியில் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் போலீசார் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
![](https://img.seithipunal.com/media/bjp-uqszx.jpg)
அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் செம்மண் கடத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
இதனால் போலீசார் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ, ஹிட்டாச்சி எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க ஒன்றிய தலைவர் விஜயகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Kanyakumari semman smuggled case against BJP celebrities