சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிக தடை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி சென்று கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் வருகின்ற 1 ஆம் தேதி வரை தியானத்தில் ஈடுபட உள்ளார். 

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமான மூலம் கேரளா, திருவனந்தபுரத்திற்கு நாளை மாலை 3:55 மணிக்கு புறப்படுகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். 

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் பிரதமர் மோடி கார் மூலம் படகு தளத்திற்கு சென்று அங்கிருந்து படகுமூலம் விவேகானந்தர் பாறைக்கு செல்ல உள்ளார். 

பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகிறார். மூன்று நாட்கள் தியானத்திற்கு பிறகு 1ஆம் தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியேறி மாலை 3:25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லியில் புறப்பட உள்ளார்.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதால் நாளை முதல் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Vivekananda Mandapam tourists visiting ban


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->