லாரி மீது பயங்கரமாக மோதிய கர்நாடகா பேருந்து: பக்தர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உட்பட 49 பேர் சபரிமலைக்கு பேருந்தில் புறப்பட்ட சென்றனர். 

இவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி திருச்செந்தூர் சென்று விட்டு நேச்சுரல் ராமேஸ்வரத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஏர்வாடி நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கர்நாடக பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்து முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த சந்தீப் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் 14 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka bus accident devotees died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->