கர்நாடகா வாலிபர் ஒகேனக்கல்லில் தற்கொலை: தீவிர சிகிச்சை பெற்று வரும் காதலி! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, கனகபுரம் அருகே உள்ள கோடிஅள்ளி கிராம பகுதியை சேர்ந்த சிறுமி (வயது 17) அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பி.யு.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த உமேஷ் (வயது 27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்த நிலையில் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். 

இன்று காலை அங்குள்ள ஆற்றின் கரையோர பகுதியில் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த காதல் ஜோடி இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் உமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் உமேஷுடன் வந்த சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்தனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் உயிரிழந்த உமேஷ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையில் இருந்த சிறுமியின் முகவரியில் பெற்றோரை தொடர்பு கொண்டு இது குறித்து போலீசார் தெரிவித்தனர். 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பே காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்றும் இதனால் சிறுமியின் பெற்றோர் கோடிஅள்ளி காவல் நிலையத்தில் பெண் காணவில்லை என புகார் அளித்தது தெரியவந்துள்ளது. 

ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka youth commits suicide by Hogenakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->