கரூர் | அக்கவுண்டன்ட் சோபனாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!  - Seithipunal
Seithipunal


நான்காவது நாளாக இன்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜி நண்பர், திமுக பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், சுமார் மூன்று கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வருமான வரி சோதனையில் முக்கிய திருப்பமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில்,  இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால அவகாசம் வேண்டும் என்று அசோக் குமார் வழக்கறிஞர் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் என்பவரின் அலுவலக கணக்காளர் அக்கவுண்டன்ட் சோபனா என்ற பெண்ணிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் ரகுநாதன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஷோபனாவிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur IT Raid Shobana


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->